
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, அருகன்குளத்தை சேர்ந்த இசக்கி (வயது 57) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ்(36) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு நேற்று முனதினம் இசக்கி வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரமேஷ், இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து இசக்கி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரமேஷை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.