திருத்தணி, மார்ச் 29: திருத்தணி காந்தி நகரில், திரவுபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. 18 நாட்கள் நடைபெற உள்ள தீமித் திருவிழாவையொட்டி பகல் நேரங்களில் மகாபாரதம் சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடைபெற உள்ளது. விழாவில், 2ம் நாளான நேற்று காலை காசிநாதபுரம் கிராமத்திற்கு அம்மன் வீதியுலா சென்றார். அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை கிராம இளைஞர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு கயிறு கட்டி அம்மன் எழுந்தருளிய டிராக்டரை கிராம வீதிகளில் இழுத்துச் சென்றனர். ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனுக்கு கற்பூர தீபாராதனை பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவில், சிறப்பு பெற்ற தீமிதித் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
The post திருத்தணியில் திரவுபதி அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.