திருத்தணி போக்குவரத்து பணிமனையில் சேதமடைந்த இரும்பு கேட் சீரமைப்பு

1 month ago 4

திருத்தணி: திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி, சித்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், பணிமனை முன் பகுதியில் உள்ள இரும்பு கேட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து, பணிமனை திறந்த வெளியாக காட்சியளித்தது. இதனால், போக்குவரத்து பணிமனைக்குள் கால்நடைகைள், விஷ பாம்புகள் புகுந்து விடுவதால், இரவு நேரங்களில் பணிமனையில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

பணிமனை நுழைவு வாயில் இரும்பு கேட் உடைந்து சேதமடைந்தது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, திருவள்ளூர் போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவின் பேரில், திருத்தணி கிளை மேலாளர் முன்னிலையில் கடந்த சில நாட்களாக நுழைவாயில் கேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, இருபுறமும் சிமென்ட் தூண்கள் அமைத்து இரும்பு கேட் பொருத்தும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருத்தணி போக்குவரத்து பணிமனையில் சேதமடைந்த இரும்பு கேட் சீரமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article