திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

20 hours ago 2

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டு காலமாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த காய்கறி மார்கெட் புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது திறக்கும் தருவாயில் பெருந்தலைவர் பெயரில்லாமல் திறக்கவுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவந்த காமராஜர் மார்க்கெட் சேதம் அடைந்த நிலையில் தற்பொழுது திருத்தணி நகராட்சியின் சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு காமராஜர் பெயருக்குப் பதில் வேறு பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக அறிந்து கடந்த மாதம் 3-ந்தேதி அன்று தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

தற்பொழுது திருத்தணி மாநகராட்சியின் சார்பில் வருகிற 09.04.2025 அன்று ம.பொ.சி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடியை பெருந்தலைவர் பெயரிடப்படாமல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது நாட்டிற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக அமைகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர் பெயரையே மீண்டும் சூட்டவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article