ஈரோடு: தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு

2 days ago 3

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் வர்ஷினி (13 வயது). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முனிராஜ், வர்ஷினி மற்றும் குடும்பத்தினர் ஆட்டு இறைச்சி சாப்பிட்டு உள்ளனர். அப்போது வர்ஷினியின் தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கி உள்ளது. இதனால் வர்ஷினிக்கு சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக வர்ஷினியை அரசு மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுப்பதாக கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டையில் உணவு சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு

பவானியில் 13 வயது சிறுமி தொண்டையில்
உணவு சிக்கி உயிரிழந்ததால் அதிர்ச்சி

உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள்
மறுப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில்
ஈடுபட்டதால் பரபரப்பு#erode #child #hospital pic.twitter.com/4WaYvmdd0h

— Thanthi TV (@ThanthiTV) April 6, 2025

Read Entire Article