தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில், சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் 100 அறைகள் கொண்ட புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த விடுதியில் 2 படுக்கைகள் கொண்ட ஒரு அறைக்கு வார நாட்களில் ஆயிரத்து எண்ணூறு ரூபாயும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டாயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும், விடுதியில் தங்கும் பக்தர்களுக்கு சோப்பு, சீப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.