
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜாமியா பள்ளிவாசலில் அகமது அலிசா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வழிபாட்டிற்காக வருவதுண்டு. இந்த ஹாஜா அகமது அலிசா தர்காவில் கந்தூரி விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. திருச்செங்கோடு ஷேக் அமீர் குடும்பத்தை சேர்ந்த ஹிதாயத்துல்லாஹ் தலையில் சந்தனக்கூடு ஏந்தி வந்து பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகீர் உசேனிடம் கொடுத்தார். அதனைப் பெற்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அடுத்து தர்காவில் சமாதி மீது போர்வை போர்த்தி மல்லிகை பூக்களால் அலங்கரித்து உலக நன்மைக்காக இந்துக்களும் முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்தனர்.