
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:
காலிப்பணியிடங்கள்: 2,299
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு பாஸ் அல்லது பெயில்
வயது வரம்பு: 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.11,100- 35,100-வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.8.2025
தேர்வு நடைபெறும் நாள்: 05.9.2025
பிற நிபந்தனைகள்: விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். எந்த கிராமத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
தேர்வு அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்திற்குரியது-https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/07/2025070723-1.pdf