திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை மீட்ட கேரள போலீசார்

3 months ago 19

திருச்சூர்: திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை கேரள போலீசார் மீட்டனர். ஏடிஎம் கொள்ளையில் முக்கிய ஆதாரங்களை கொள்ளையர்கள் ஆற்றில் வீசியது தெரியவந்தது. திருச்சூரில் கடந்த 27-ம் தேதி 3 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம். கொள்ளையர்கள் 7 பேர் தப்பி வந்தபோது குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 7 பேரில் ஒரு கொள்ளையன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நிலையில் ஒரு கொள்ளையன் காயம் அடைந்தார்.

ஏ.டி.எம். கொள்ளையர்கள் 5 பேரை காவலில் எடுத்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களை சேகரிக்க கொள்ளையர்களை கேரள போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். 3 ஏடிஎம்களில் உள்ள பணம் வைக்கும் 12 டிரேக்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை ஆற்றில் வீசியதாக கொள்ளையர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். கொள்ளையர்கள் கூறிய தகவலை அடுத்து ஸ்கூபா நீச்சல் குழு, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தாணிக்குடம் ஆற்றில் தேடினர்.

ஆற்றில் தேடுதல் நடத்தியதில் 9 டிரேக்கள், 2 கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை கேரள போலீசார் மீட்டனர்.

The post திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஆற்றில் வீசிய ஆயுதங்கள், பொருட்களை மீட்ட கேரள போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article