*உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் தினந்தோறும், சில கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை, சில கிராமங்களில் 15 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்குவதால், தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், பல இடங்களில் அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து புகார் அளித்தால் பல நாட்களுக்கு பிறகு சரிசெய்வது வழக்கம்.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நெடும்பலம் ஊராட்சிக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாய்கள் கடந்த 50 நாட்களுக்கு மேலாக உடைந்துள்ளது. இதுவரை சரிசெய்யதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது.
இது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நேரில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு நகர விவசாயிகள் சங்க நகர செயலாளர் ராமலிங்கம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
The post திருத்துறைப்பூண்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.