திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

3 months ago 22

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஈமெயில் மிரட்டல் கடிதம் வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இரு முறை இது போன்ற மிரட்டல் கடிதம் வந்தது மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3வது முறையாக இன்று காலை 7 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சுவேதா என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதத்தில் உங்கள் கல்லூரியில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என மிரட்டல் வந்தது. இதை அடுத்து உடனடியாக தகவல் அறிந்த மாநகர காவல் துறையினர் திருச்சி ஜோசப் கல்லூரி, சமது பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளில் இன்று காலையிலிருந்து வெடிகுண்டு கண்டறியும் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் செயல்படும் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளிக்கும் இன்று காலை இதே போன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து வயனூர் பகுதியில் உள்ள அமிர்தானந்தா பள்ளிக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து யார் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் புரளி கலப்புவோர் கண்டுகொண்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

The post திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article