திருச்சியில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

7 hours ago 1

திருச்சி,

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அத்துடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 3,200 பேருந்துகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

"இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர். திமுக ஆட்சியில் இவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை எண்ணி வியப்பாக உள்ளது. அடுத்து வரும் திமுக ஆட்சியிலும் நமது ஆட்சியின் சாதனைகளை நாமே முறியடிப்போம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதிமுகவின் இருண்ட ஆட்சியில் இருந்து மீட்டு திமுக விடியல் ஆட்சி நடத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடரும் அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதை. அது ராக்கெட் வேகத்தில் இருக்கும். "

இவ்வாறு அவர் பேசினார்.  

Read Entire Article