
புதுடெல்லி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக கே.எல். ராகுல் கூறியதாவது,
எங்கள் மதிப்பிற்குரிய ராணுவ வீரர்களுக்கு , அவர்களுக்குப் பின்னால் நிற்கும் குடும்பங்களுக்கும் - உங்கள் துணிச்சல், தியாகம் மற்றும் வலிமைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஒரு தேசமாக, நாங்கள் உங்கள் பின்னால் உறுதியாக நிற்கிறோம், எங்களைப் பாதுகாத்ததற்கு நன்றி. ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார் .