திருச்சி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா

1 month ago 6

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கடந்த அக்டோபர் 3 ம் தேதி.கொடியேற்றத்துடன் தொடங்கி திருதேரோட்டம் வெது விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குணசீல ஸ்ரீபிரஸன்ன மஹரிசியின் தவத்திற்காக வேங்கடாஜலபதியாக காட்சியளித்த அற்புதத் தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கின்றார்.

தன்னை அண்டி வந்து வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் நல்கி அருளாட்சி புரிந்து வருகிறார். திருப்பதி சென்று தங்களது பிரார்த்தனைகளை இயலாதவர்களும் செலுத்த இந்த கோயிலில் செலுத்தி பலன் பெறுகிறார்கள். எனவே, இக்கோயில் தென் திருப்பதி எனப்படுகிறது.

குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாள் விரதமுறைப்படி வணங்கினால் அவர்களது வினைகளை சுவாமி போக்கி அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். இக்கோயிலில் திருவிழாக்களில் நடைபெறும் சிறப்புக்குரிய பிரம்மோத்ஸவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து பங்கேறு பிரசன்ன வேங்கடாஜலபதியை வழிபடுவர்.

 

The post திருச்சி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா appeared first on Dinakaran.

Read Entire Article