திருச்சி காஜாமலை கூடைபந்து போட்டியில் சென்னை ஆர்பிஎப் அணி வெற்றி

1 day ago 2

 

 

 

திருச்சி, மே 10: ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட அளவிலான கூடைபந்து போட்டியில் சென்னை கோட்ட அணி (ஆர்பிஎப்) வெற்றி பெற்றது. திருச்சி கோட்ட அணி (ஆர்பிஎப்) 2ம் இடம் பிடித்தது.
திருச்சி காஜாமலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி நிறுவனத்தில் ரயில் பாதுகாப்பு துறை உள்கோட்ட அளவிலான கூடைபந்து போட்டி மே.8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது.
சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில் பாதுகாப்பு படை அணியிகள் பங்கேற்றன. இறுதிபோட்டியில் திருச்சி கோட்ட அணி (ஆர்பிஎப்) மற்றும் சென்னை கோட்ட அணி (ஆர்பிஎப்) விளையாடின. இதில் சென்னை கோட்டம், திருச்சி கோட்டத்தை 35 – 22 என்ற ஷாட் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. திருவனந்தபுரம் கோட்ட அணி (ஆர்பிஎப்), பாலக்காடு கோட்ட அணியை (ஆர்பிஎப்) 38 – 33 என்ற ஷாட் கணக்கில் வென்று 3ம் இடம் பிடித்தது. வெற்றிபெற்ற அணிக்கு திருச்சி கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அபிஷேக் பரிசுகளை வழங்கி பாராட்னார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பயிற்சி நிறுவன, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை கமாண்டன்ட் சீனிவாஸ், திருச்சி கோட்ட முதுநிலை மின் பொறியாளர் பிரசாத் சிரயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post திருச்சி காஜாமலை கூடைபந்து போட்டியில் சென்னை ஆர்பிஎப் அணி வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article