
திருச்சி,
சேலம் ரெயில்வே கோட்டத்தின் கரூர் பிரிவில் உள்ள ரெயில்வே பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சியில் இருந்து ஈரோடு வரை செல்லும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.