திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி

4 hours ago 2

திருக்காட்டுப்பள்ளி, பிப்.12: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனுறை  அக்னீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை தைப்பூசத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், ரிஷப வாகனத்தில் புஷ்ப அலங்காரம் செய்து, பிரதான வீதிகள் வழியாக வீதி உலா வந்து காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லோ.பிரகதீஸ்வரன், ஆய்வாளர் கு.ஜனனி செய்திருந்தனர். இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Read Entire Article