
திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹார மூர்த்தியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வருகை தந்தார்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.