ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள் வெளியீடு

4 hours ago 1

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உயிரிழந்த 26 பேரின் விவரம்:-

 

 

Read Entire Article