திருத்துறைப்பூண்டி மார்ச் 29: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருகொள்ளிக்காடு சாலையை சீரமைத்திட திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து ஊரகவளர்ச்சி ஆணையரை சந்தித்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். திருத்துறைப்பூண்டி சாலை 5 கி.மீ தூரம் பழுது அடைந்துள்ளது உள்ளது, உலகப் புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அந்த சாலையின் வழியில் தான் உள்ளது.
இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோரும் செல்லும் வழியாகவும் உள்ளது. எனவே இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைத்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இது குறித்து எம்எல்ஏ மாரிமுத்து கூறுகையில், கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்திட ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் இதே கோரிக்கை தொடர்பாக அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக எம்எல்ஏ மாரிமுத்து தெரிவித்துளார்.
The post திருகொள்ளிக்காடு சாலையை சீரமைத்திட கோரிக்கை appeared first on Dinakaran.