திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நசிருதீன் அகமது காலமானார்

3 hours ago 1

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கலிகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவுமா நசிருதீன் அகமது இன்று காலமானார். இவர் அந்தப் பகுதியில் 'லால் டா' என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.50 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமையில் இன்று அதிகாலையில் மாரடைப்பால் நசிருதீன் அகமது உயிரிழந்தார். இது குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

நதியாவின் காளிகஞ்ச் எம்.எல்.ஏ.வான எனது சக ஊழியர் நசிருதீன் அகமதுவின் (லால்) திடீர் மறைவால் வருத்தமடைந்தேன். மூத்த பொது ஊழியர் மற்றும் அரசியல் பிரதிநிதியான அவர் எங்கள் நம்பகமான சொத்து. அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் மிகச் சிறந்த சமூக சேவகர், நான் அவரை உண்மையிலேயே மதிப்பேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Saddened by the sudden demise of my colleague Nasiruddin Ahmed ( Laal), MLA from Kaliganj, Nadia.A veteran public worker and political representative, he was our trustworthy asset. He was a lawyer and a very good social worker, and I truly valued him.My condolences to his…

— Mamata Banerjee (@MamataOfficial) February 2, 2025
Read Entire Article