திராவிட மாடல் கல்வி: சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி - மு.க.ஸ்டாலின்

3 months ago 17

சென்னை,

அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ,மாணவியரும் மற்றும் 1 பயிற்றுநரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

திராவிட மாடல் கல்விக்கு செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு.. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு ஐ.டி.ஐ.களை தரம் உயர்த்த டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோத்து பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நானும் டாடா குழுமத் தலைவரும் இதற்கான இத்திட்டத்தைத் தொடங்கினோம்.

இன்று, தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்தியத் தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 29 மாணவ - மாணவியரையும் ஒரு பயிற்றுநரையும் பார்த்தபோது பெருமிதத்தால் பூரித்துப் போனேன். அதிலும் கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், இதில் பெரும்பாலானோர் மாணவிகள். இந்த புகைப்படங்களே திராவிட மாடலை கேள்வியெழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி" என்று தெரிவித்துள்ளார்.

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு…நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த @TataTech_News உடன் கைகோத்து பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நானும் டாடா குழுமத் தலைவரும் இதற்கான இத்திட்டத்தைத் தொடங்கினோம்.இன்று,… https://t.co/scKbkusL5w pic.twitter.com/VZ0osURjJs

— M.K.Stalin (@mkstalin) October 24, 2024
Read Entire Article