தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா: அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

7 months ago 39

திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று (அக்.9) முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Read Entire Article