திம்மசமுத்திரம் பகுதியில் லாரியுடன் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவருக்கு வலை

4 weeks ago 6

காஞ்சிபுரம், டிச.21: திம்மசமுத்திரம் பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் மற்றும் போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில், பொது விநியோக கிடங்கில் 1,150 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர்கள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டடிருந்தனர். அப்போது, திம்மசமுத்திரம் ஏரி அருகில் பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி தப்பியோடிவிட்டார். அங்கு, உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 1,150 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்து, சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ேமலும், தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post திம்மசமுத்திரம் பகுதியில் லாரியுடன் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article