திமுகவில் இணைந்த தவெக நிர்வாகி

1 month ago 9

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய தவெக செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஜெகபர்தீன். இவர் அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தவெகவில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரோடு தவெக பகுதி பொறுப்பாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு பொறுப்பு தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி நலத்திட்டங்கள் வழங்குவதற்கு தங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி தவெக நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவதாகவும், சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளை அந்த கட்சியில் புறக்கணிப்பதால் அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக ஜெகபர்தீன் கூறினார்.

The post திமுகவில் இணைந்த தவெக நிர்வாகி appeared first on Dinakaran.

Read Entire Article