நாகர்கோவில: நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது மழை பெய்யாத நிலையில் வடிகால்கள் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மாநகர பகுதியில் பெய்யும் மழை நீர் பரக்கின்கால் ஓடை வழியாக வெளியேறுகிறது. ஆனால் மண், புதர்கள் மண்டி கிடப்பதால், தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்தை மழையின்போது பரக்கின்கால் ஓடை நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால் அந்த வழியாக காரில் சென்றவர் சாலை என கருதி பரக்கின்கால் ஓடையில் காரை இறக்கிவிட்டார்.
ஆனால் அதிர்ஷ்ட வசமாக எந்த உயிர் பலியும் நடக்கவில்லை. இந்தநிலையில் மாநகராட்சி நிர்வாகம் பரக்கின்கால் ஓடையில் தேங்கி கிடக்கும் மண், புதர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் அசம்புரோட்டில் உள்ள வடிகால் உள்பட மாநகர பகுதியில் முக்கியமான வடிகால்களை தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
The post நாகர்கோவில் மாநகர பகுதியில் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.