திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

3 hours ago 1

சென்னை: திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article