திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

3 months ago 14

திருநெல்வேலி: திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்களை வரவேற்று திமுக சார்பில் பதாகை வைத்திருந்தார். இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Read Entire Article