தேனி, ஜன. 18: சென்னையில் நடக்கும் திமுக சட்டத்துறை மாநாட்டில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்தில் இருந்து சென்ற திமுக வழக்கறிஞர் அணியினரை தேனித்தொகுதி எம்பி தங்கதமிழ்செல்வன் வழியனுப்பி வைத்தார். சென்னையில் திமுக சட்டத்துறை மாநாடு இன்று நடக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுகவை சேர்ந்த திமுக வழக்கிறஞர் அணியினர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டு சென்னைக்கு சென்றனர்.
சென்னையில் நடக்கும் திமுக சட்டத்துறை மாநாட்டிற்கு சென்ற திமுக வழக்கறிஞர் அணியினரின் பேருந்துகளை தேனி நகர் பங்களாமேட்டில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனித் தொகுதி எம்.பியுமான தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் தேனி நகர திமுக செயலாளர் நாராயணபாண்டியன், உயர்நீதிமன்ற வக்கீல்.நிஷாந்த், தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post திமுக சட்டத்துறை மாநாட்டில் பங்கேற்க மாவட்ட திமுக வழக்கறிஞரணியை வழியனுப்பி வைத்த தேனி எம்பி appeared first on Dinakaran.