திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சென்னை மண்டல நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

2 months ago 16

திருவள்ளூர்: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சென்னை மண்டல நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்றார்.  திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் ஆதிதிராவிடர் நலக்குழு சென்னை மண்டல மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் அடுத்த காக்களூர் லட்சுமி மஹாலில் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் ச.தசரதன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அமைப்பாளர் அ.விமல் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். மேலும், கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்களான சென்னை வடக்கு வெ.அன்பரசன், சென்னை வடகிழக்கு சி.ஏழுமலை,

சென்னை கிழக்கு எல்பிஎப்.மோகன், சென்னை மேற்கு இ.இளம்பரிதி, சென்னை தென்மேற்கு புலியூர் டி.மோசஸ், சென்னை தெற்கு சி.சுரேஷ், திருவள்ளூர் கிழக்கு கா.சம்பத், திருவள்ளூர் மேற்கு சிலம்பு பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் வடக்கு தி.க.பாஸ்கரன், காஞ்சிபுரம் தெற்கு வி.புருஷோத்தமன், ராணிப்பேட்டை சி.சக்திவேல்குமார், வேலூர் ஜெ.திவாகர்,

காஞ்சிபுரம் மாநகரம் மோகன் ஆவடி மாநகரம் தண்டுரை கோபி, தாம்பரம் மாநகரம் நடராஜன், திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் பாரிவாக்கம் ஊராட்சி தலைவர் வி.தணிகாசலம், துணை அமைப்பாளர்கள் நூம்பல் ஆசைத்தம்பி, சென்னீர்குப்பம் வெங்கடேசன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் டி.செல்வகுமார் மற்றும் துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காஞ்சி மாவட்ட துணை அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

The post திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சென்னை மண்டல நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article