
ஈரோடு,
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது,
காஷ்மீர் பஹல்காமில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.இந்த சமயத்தில் இந்தியா உறைந்து போய் இருந்த நிலையில் மத்திய அரசு ராஜதந்திர செயல்பாடு மூலம் முப்படை வீரர்கள் தேச பற்று அடிப்படையில் ஆபரேஷன் சிந்தூர் போரை தொடுத்து வெற்றி நிலை நிறுத்தி நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு நம்பிக்கை கொடுத்து உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தவறான பாதையை மகளிர் இடம் கடைப்பிடிக்கும் செயலுக்கான தண்டனையாக இருக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு எடுத்து காட்டி உள்ளது. சட்டம் படிப்படியாக தன் நடவடிக்கைகள் செய்து இருக்கிறது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர் கதையாக இருக்கிறது.ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கூட குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை,தமிழகத்தில் பல கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிக்கவில்லை என்பதால் சி.பி.ஐ தலையிட வேண்டி உள்ளது. . இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சிறிய காலக்கெடுவுக்குள் உண்மை நிலையை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை என்பது அவசியமாகும்.. இவ்வாறு அவர் கூறினார்.