‘தினமும் 10 நாய்களுக்காவது கருத்தடை’

1 week ago 7

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், ‘‘சுகாதாரத் துறையும், கால்நடைத்துறையும் இணைந்து ஒவ்வொரு கால்நடை மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் 10 நாய்களுக்காவது கருத்தடை செய்யக்கூடிய நிலையை ஒரு வாரம் முழுவதும் செய்தால் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். அதை இந்த இரண்டு துறைகளும் சேர்ந்து செய்யுமா’’ என கேட்டார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘கருத்தடை செய்வது கால்நடைத் துறையின் பொறுப்பு. அதற்கான தடுப்பூசி போடுவது மருத்துவத் துறையின் பொறுப்பு. கடந்த 2 ஆண்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் 10,999ல் புதிதாக நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்கும் மருந்து வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர்’’ என்றார்.

The post ‘தினமும் 10 நாய்களுக்காவது கருத்தடை’ appeared first on Dinakaran.

Read Entire Article