திண்டுக்கல்லில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதி உதவி

1 month ago 5

திண்டுக்கல், நவ. 19: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் 2023-2024 ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.78,15,819 காசோலையினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரிடம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் சுபாஷினி வழங்கினார்.

இக்காசோலையினை கலெக்டர் பூங்கொடி முன்னிலையில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் செல்வகுமார் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, திண்டுக்கல் சரக துணை பதிவாளர் வெங்கட்லட்சுமி, உஷாநந்தினி,வங்கி பொது மேலாளர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதி உதவி appeared first on Dinakaran.

Read Entire Article