திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

1 month ago 7

திண்டுக்கல், ஜன. 1:மேட்டுப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ ஜனநாயக பேரவை சார்பில் புத்தாண்டை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட தொண்டரணி ரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுவீட் ராஜா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை காஜா மைதீன் மதநல்லிணக்க உறுதிமொழியை எடுத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரேம் ராஜா, விமலா சேவியர், சமூக ஆர்வலர் உமர் மரைக்காயர் சேட், திராவிட கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் கணேசன், திருக்குறள் பேரவை மாநில பொருளாளர் பாவலர் சிவகுமார், தி.க. நிர்வாகி கருணாநிதி, தொழிலதிபர் ரூபன், சமூக ஆர்வலர்கள் ஆரோக்கியம் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமா முத்து நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article