திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி

5 months ago 16

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் . மின்கசிவு காரணமாக  இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 4 மாடி கட்டிடங்கள் கொண்ட மருத்துவமனையில் பல இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் அணிவகுத்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article