
திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் கடந்த 14.10.2015 அன்று திண்டுக்கல் வழி திருச்சி ரோடு, வடமதுரை சந்திப்பில் சிங்கராஜ் மகன் சமாதானபிரபு, ராசுதேவர் மகன் ஈஸ்வரன், சுப்பிரமணி மகன் கருப்புசாமி, கருத்தகண்ணன் மகன் சிங்கராஜ் ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வணிக நோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 52 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற மேற்சொன்ன நபர்களை கஞ்சா மற்றும் நான்கு சக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் புலன்விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி 30.04.2025 அன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி சமாதானபிரபு என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்டு சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஐர் செய்து நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த புலன்விசாரணை அதிகாரிகள் மற்றும் காவலர்களை அமலாக்கப்பணியகம் காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றப்பிரிவு காவல்துறை தலைவர், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினார்கள்.