திண்டுக்கல் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

1 month ago 4
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வாகனம் ஓட்டுவதற்கான உரிய வயதில்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுவனும், உடன் வந்த தம்பியும் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தனர். பொத்தகனவாய்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன்களாக வெள்ளைச்சாமி, வள்ளியப்பன் ஆகியோர் தந்தையின் டூவீலரில் சென்று, டீ வாங்கிக் கொண்டு திரும்பியபோது கம்பிளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையை கடக்கும்போது செந்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து டூவீலர் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article