திண்டுக்கல்: திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜாதானிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இந்லையில் இந்த கிரமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இதில் கடந்த சில நாட்களாக தொடக்க பள்ளிகளில் படிக்கும் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். அந்த குழந்தைகளை பெற்றோர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்டைக்காக சேர்த்த போது தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 30-க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கிராமத்தில் மஞ்சள் காமாலைக்கு காரணமாக சுத்தம் இல்லாத குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் என கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவ முகாம் அமைத்து மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
The post திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு appeared first on Dinakaran.