சென்னை,மே.15: ஜெர்மனியில் வரும் ஜூலை 16ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலக அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான எப்ஐஎஸ்யு விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை ஏஞ்ஜெல் சில்வியா, வீரர்கள் ஜெரோம், அஸ்வின் கிருஷ்ணன், ரீகன், கூடைப்பந்து வீரர் சங்கீத் குமார், வீராங்கனை தேஜ, சுகந்தன், கையுந்துபந்து வீராங்கனைகள் ஆனந்தி, சுஜி, கனிமொழி, வீரர் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை கனகலட்சுமி என 12 வீரர், வீராங்கனைகளுக்கு செலவினத்தொகையாக மொத்தம் ரூ.32.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 9 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
The post தமிழ் நாட்டை சேர்ந்த 12 வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் காசோலை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.