திண்டிவனம் அருகே வழிப்பறி வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி

2 weeks ago 1

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). இவர் நேற்று முன்தினம் இரவு பாஞ்சாலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருடன் திண்டிவனம், செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். பின்னர் இரவு 12 மணியளவில் ஒரத்தி கிராமத்திற்கு நண்பரை பார்த்து விட்டு மீண்டும் திண்டிவனம் நோக்கி வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அனந்தமங்கலம் அருகே வந்தபோது பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது. இதனால் அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை மடக்கி செல்போன், பணம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்தனர். அந்த நபர் கூச்சலிட அப்பகுதி மக்கள் ஓடி வந்து துரத்தினர். இருவரும் வயல்வெளி பகுதி வழியாக தப்பி ஓடினர்.

ஒலக்கூர் எல்லை அருகே வந்தபோது சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சூர்யா சிக்கி உயிரிழந்தார். உஷாரான மணிகண்டன் மின்வேலி அருகே செல்லாமல் நின்று கொண்டார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த மணிகண்டன், ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திண்டிவனம் அருகே வழிப்பறி வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Read Entire Article