திட்ட மதிப்பை தமிழில் தயாரிக்க கோரிய மனு - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

1 day ago 4

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ''தமிழ்நாட்டில் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவள்ளுவர் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது என்று ஏராளமான விருதுகளை தமிழறிஞர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறது.

ஆனால், நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை தமிழில் தயாரிப்பு இல்லை. ஆங்கிலத்தில்தான் தயாரித்து வருகின்றனர். இதை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இந்த புகாரை பரிசீலிக்கும்படி நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, மனுதாரர் கோரிக்கையை 8 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Read Entire Article