
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் இன்று சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.