திடீரென மிரண்டு ஓடிய யானை - 42 பேர் காயம்

3 days ago 3

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் புகழ்பெற்ற திருச்சூர் பூரத்தில் கலந்து கொண்ட யானை ஒன்று மிரண்டு ஓடியதால் 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எம்ஜி சாலையில் நீண்ட தூரம் யானை மிரண்டு ஓடியதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சிதறியோடினர்.

அப்போது கூட்ட நெரிசலில் ஒருவருக்கொருவர் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினரை சேர்ந்த யானை பாதுகாப்பு படையினர் மற்றும் யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே காயமடையந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திடீரென யானை மிரண்டு ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Read Entire Article