டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரர் இவரா..? வெளியான தகவல்

17 hours ago 2

மும்பை,

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் புதிய கேப்டனை தேடும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. மேலும் கேப்டன் மட்டுமின்றி ரோகித்துக்கு பதிலாக மாற்று தொடக்க ஆட்டக்காரரையும் பி.சி.சி.ஐ. தேடி வருகிறது.

இந்நிலையில் ரோகித்துக்கு மாற்று வீரராக இந்திய டெஸ்ட் அணியில் 23 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலேயே அவருக்கு இந்த வாய்ப்பை வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலங்களாக தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன், ரோகித் இடத்தை நிரப்புவார் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். மேலும் இங்கிலாந்து கவுண்டி தொடரில் விளையாடியுள்ள சாய் சுதர்சனுக்கு அங்குள்ள சூழல் நன்கு தெரியும் என்பதால் அவரது சேர்க்கை இந்திய அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article