திருவனந்தபுரம்,
கேரளா பாலக்காடு அருகே குற்றநாடு பகுதியில் முஸ்லிம் மசூதி திருவிழா நடைபெற்றுவந்தது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் மேச்சல் திருவிழாவில் ஏராளமான யானைகளை மேச்சலிடுவது வழக்கம். அதுபோல நேற்று இரவு மேச்சல் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் 27 பகுதிகளில் இருந்து 41 யானைகள் பங்கேற்றன. இந்த யானைகளில் ஒன்றான வள்ளங்குலம் பகுதியை சேர்ந்த தனிநபருக்கு சொந்தமான நாராயணன் குட்டி என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. இதைக் கட்டுப்படுத்த யானை பாகன் முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாகனை தாக்கி கொடூரமாக கொன்றது. அங்கு இருந்தவர்களையும் துரத்திய நிலையில் அதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த திருவிழாவில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.