சென்னை: திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்ததலைவர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் விஜயதரணி, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, நயினார் நாகேந்திரனுக்கு செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.