"தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பைல்ஸ் ரிலீஸ்.. யார் யாருக்கு டெண்டர்?" - அண்ணாமலை

1 month ago 4

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தி.மு.க. பைல்ஸ்-3 வெளியிடப்படும். அதில், தி.மு.க. மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமுல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள். அப்படி கிடைக்க விட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.

ஆதி திராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை வரும் 12-ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடி உள்ளார். முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக அவர் பதவி விலக வேண்டும்.

விருதுநகரில் எஸ்.ஐ. மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீசார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளததை எடுத்துக்காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

Read Entire Article