சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சீர்காழி மு.பன்னீர்செல்வம் (திமுக) பேசுகையில், “சீர்காழி தொகுதி என்பது ஒரு பெரிய அளவில் வளர்ச்சி பெறாத தொகுதி. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்று சொன்னால், தமிழ்நாடு முதல்வர் சீர்காழி தொகுதியினுடைய மாப்பிள்ளை. அதேபோல வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் சீர்காழி தொகுதியினுடைய மாப்பிள்ளை.
அதேபோல போக்குவரத்துத் துறை அமைச்சர் சீர்காழி தொகுதி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தினுடைய மாப்பிள்ளை. இத்தனை நபர்கள் இருந்தும் இந்த சீர்காழி தொகுதிக்கு ஒரு தொழிற்பயிற்சி நிலையம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்னை என்ன சொல்வார்கள்? எனவே, அமைச்சர் மறுபரிசீலனை செய்து, எனக்கு ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வருவாரா?’’ என்றார்.
இப்படி மாப்பிள்ளை தொகுதி, மாப்பிள்ளை தொகுதி என்று எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் சொன்னதும் அவையில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் சிரித்தனர். இதனால், அவையில் சிரிப்பலை எழுத்தது.
தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று, அதுவும் மாப்பிள்ளை தொகுதி என்று சொன்னார். ஆகவே, விரைவாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, புதிய தொழிற்பயிற்சி நிலையம் துவங்குவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்” என்றார்.
The post தி.மு.க எம்எல்ஏவின் மாப்பிள்ளை பேச்சு: சட்டப்பேரவையில் சிரிப்பலை appeared first on Dinakaran.