தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நடிகர் விஜய் வருவார் என்பதில் நம்பிக்கை இல்லை - பெ.சண்முகம்

3 months ago 15

காரைக்குடி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இந்த கல்லூரியில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி மாநில தேர்தல் முடிவுகள் வருத்தம் அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்தியா கூட்டணி இதனை உணர வேண்டும். மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுபோல பிற மாநிலங்களில் இல்லை. அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வலுப்பெற வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான முயற்சியை மேற்கொள்ளும்.

தமிழக அரசியலில் பல பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளை விரும்பாதவர்கள் நடிகர் விஜய்யை ஆதரிக்கலாம். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article