
தி.மலை,
திருவண்ணாமலை மாவட்டம் கழனிப்பாக்கத்தில் 100 நாள் வேலை செய்வோர் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆலமரத்தடியில் மதிய இடைவேளையின்போது இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால் ஆலமரக்கிளை முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.
ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி (வயது 45), வேண்டா (வயது 49) ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.